என் மலர்
தமிழ்நாடு

X
புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்த கல்லூரி மாணவர்கள்
By
மாலை மலர்4 Feb 2023 5:16 PM IST

- நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.
பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story
×
X