என் மலர்
தமிழ்நாடு

புயல் எதிரொலி: நாகை கடலோர பகுதிகளில் காற்றுடன் கனமழை

- 3-ந்தேதி புயலாக வலுவெடுத்த பிறகு அது வட தமிழ்நாடு தென் ஆந்திர பகுதியை நோக்கி நகரும்.
- 4-ந்தேதி மாலை அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
நாகை:
வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் அதன் சீற்றம் அதிகமாக இருக்கும்.
3-ந்தேதி புயலாக வலுவெடுத்த பிறகு அது வட தமிழ்நாடு தென் ஆந்திர பகுதியை நோக்கி நகரும். 4-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அதன் நகரும் திசை மற்றும் வேகத்தை பொறுத்து அது சென்னைக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், செருதூர், வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.
கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.