என் மலர்
தமிழ்நாடு
X
விருதுநகர் வெடிவிபத்து: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Byமாலை மலர்21 Feb 2024 5:10 PM IST
- விருதுநகர் அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
- வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
X