search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,805 கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,805 கன அடியாக சரிவு

    • ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 2267 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,805 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று 103.73 கனஅடியாக இருந்தது. இன்று காலையும் அதே நிலையில் நீடிக்கிறது.

    Next Story
    ×