என் மலர்
தமிழ்நாடு
3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு வெள்ளி தாமரை பரிசு
- தாமரை மலரை 3 கிலோ வெள்ளியில் வடிவமைத்துள்ளார்.
- பிரதமருக்கு இந்த பரிசை தயார் செய்ய எனக்கு 15 முதல் 20 நாட்கள் ஆனது.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு பரிசாக, ஜம்முவைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர், தாமரை மலரை 3 கிலோ வெள்ளியில் வடிவமைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காகவும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றிய பிறகு, மோடிக்கு இந்த தனித்துவமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தனது மனதில் தோன்றியதாக ஜம்முவின் புறநகரில் உள்ள முத்தி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு சவுகான் கூறினார். அவர், பாஜகவின் இளைஞர் பிரிவு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா செய்தித் தொடர்பாளரும் ஆவார்.
மேலும் அவர், "எங்கள் அன்பான பிரதமருக்கு இந்த பரிசை தயார் செய்ய எனக்கு 15 முதல் 20 நாட்கள் ஆனது. நான் தனிப்பட்ட முறையில் வெள்ளியில் தாமரை மலரை வடிவமைத்துள்ளேன். அதை அவருக்கு வழங்க காத்திருக்கிறேன்.
தனது அனுபவத்தை எல்லாம் பயன்படுத்தி தாமரையை வடிவமைத்துள்ளேன். என் ஆன்மா அதில் உள்ளது. மோடி எனக்கு கடவுள் போன்றவர். அவர் இந்த பரிசை விரும்புவார் என நம்புகிறேன்" என்றார்.
இந்த பரிசை அவருக்கு வழங்க பிரதமரை சந்திக்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருப்பதாக அவரது மனைவி அஞ்சலி சவுகான் தெரிவித்துள்ளார்.