என் மலர்
தமிழ்நாடு
X
திருச்சி எஸ்.பி. வருண்குமார் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நாதக நிர்வாகி கைது
Byமாலை மலர்13 Aug 2024 4:31 PM IST
- திருச்சி மாவட்ட எஸ்.பி. குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அந்த சமயத்தில் சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணன் தனது பதிவில், "சாரே! நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்னரே! தயவு செய்து இறந்து விடுங்கள்.. எங்கள் அண்ணா சொன்னாலும் கேட்க மாட்டோம்... நீங்கள் தவறினாலும்? அதன் பலனை சந்ததிகள் சந்திக்கும்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X