என் மலர்
தமிழ்நாடு

X
தஞ்சையில் டிரைவர்கள் மோதல்: ஒரு பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு
By
மாலை மலர்21 Nov 2022 5:27 PM IST

- இரண்டு பேருந்துகளுக்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதச்செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது
தஞ்சை:
பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து புறப்பட்டதும் இரு டிரைவர்களும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வந்துள்ளனர். தஞ்சை வரை இந்த போட்டி நீடித்துள்ளது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் வந்ததும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு டிரைவர், ஆத்திரத்தில் தனது பேருந்தை பின்னோக்கி வேகமாக இயக்கி, மற்றொரு பேருந்தின் மீது மோதினார். இதில் அந்த பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது. அப்போது இரண்டு பேருந்துகளுக்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதச்செய்யும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சண்டை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
X