என் மலர்
தமிழ்நாடு

X
5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு
By
மாலை மலர்19 Dec 2023 9:13 AM IST (Updated: 19 Dec 2023 9:14 AM IST)

- நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.
- தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு.
நெல்லை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரியில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது.
தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X