search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு 8 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம்- விஜய் வசந்த் திறந்து வைத்தார்
    X

    நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு 8 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம்- விஜய் வசந்த் திறந்து வைத்தார்

    • பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவ- மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கினார்.
    • கிழக்கு வட்டார செயல் தலைவர் அசிம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த கழிப்பிட வசதி செய்து தர வேண்டி பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8.5 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவர்களுக்கான கழிப்பிட கட்டிடங்களை இன்று (21. 08. 2023) இராஜக்கமங்கலம் வட்டார தலைவர் அசோக்ராஜ் தலைமையில் கீழமணக்குடி பங்கு பணியாளர் ஆன்றனி பிரபு முன்னிலையில் மாணவர்களுடன் இணைந்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



    பின்னர் பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவ- மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கீழமணக்குடி லாரன்ஸ், மணக்குடி பஞ்சாயத்து தலைவர் சிறில் நாயகம், பள்ளம் பஞ்சாயத்து தலைவர் கேவின், ஒன்றிய கவுன்சிலர் கேத்தரின் பிரபு, கிழக்கு வட்டார பொருளாளர் செல்லப்பன், பறக்கை ராபின்சன், ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார செயல் தலைவர் அசிம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×