என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தமிழகம் வந்தார் பிரதமர் மோடி- மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தமிழகம் வந்தார் பிரதமர் மோடி- மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/11/11/1790300-modi-dnk.jpg)
X
தமிழகம் வந்தார் பிரதமர் மோடி- மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
By
மாலை மலர்11 Nov 2022 2:59 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
- பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு சென்றார்.
திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
மோடியின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Next Story
×
X