என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்... மோடி பேச்சு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்... மோடி பேச்சு](https://media.maalaimalar.com/h-upload/2024/01/02/1999005-modispeech.webp)
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்... மோடி பேச்சு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
- பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.
திருச்சி :
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இதன்பின்னர் "வணக்கம், எனது மாணவ குடும்பமே" என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
* இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
* பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது.
* பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
* 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை கழகங்களை தொடங்கினர்.
* பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின.
* பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.
* கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்.
* மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும்.
* புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்.
* இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உரகுக்கு பறைசாற்றுகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.