search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை

    • பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவையொட்டி 13-ந்தேதியும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×