search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரியில் 9ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்.. பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு
    X

    கிருஷ்ணகிரியில் 9ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்.. பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு

    • பள்ளியில் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.

    திருமணம் முடிந்த நிலையில், தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்தபடியே மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் மாணவி தாலியை மறைத்தபடி வந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனையடுத்து ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

    வீட்டில் விஷேசம் எனக்கூறிய மாணவி 3 நாட்கள் திருமணத்திற்கு விடுப்பு எடுத்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் திருமணம் செய்த 25 வயது நபர் மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×