search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    LIVE

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்... லைவ் அப்டேட்ஸ்

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 11:20 AM IST

      தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய தொடங்கினார். சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 

    • 15 March 2025 11:18 AM IST

      வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:-

      * எண்ணெய் வித்துகள் இயக்கம் -ரூ.108 கோடி

      * நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்- ரூ.160 கோடி

      * மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்-ரூ.142 கோடி

      * இயற்கை சீற்ற பாதிப்பு - ரூ.841 கோடி

      * கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.349.

      * வீட்டு தோட்ட காய்கறி சாகுபடி- 75 சதவீத மானியத்தில் விதைகள்

      * தென்னை பரப்பு விரிவாக்கம்- ரூ.35 கோடி

      * நுண்ணீர் பாசனத் திட்டம் - ரூ.1,168 கோடி

      * வேளாண் இயந்திரங்கள் வாடகை- ரூ.17.37 கோடி

      * 17 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் ரூ.215.80 கோடி 

    • 15 March 2025 11:14 AM IST

      நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

    • 15 March 2025 11:14 AM IST

      பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 

    • 15 March 2025 11:12 AM IST

      வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 11:11 AM IST

      உழவர்களுக்காக இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 11:11 AM IST

      இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

    • 15 March 2025 11:09 AM IST

      மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். 

    • 15 March 2025 11:08 AM IST

      மீன் குஞ்சு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும். 

    • 15 March 2025 11:07 AM IST

      5 ஆயிரம் பேருக்கு சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    Next Story
    ×