என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 11:06 AM IST
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு
- 15 March 2025 11:05 AM IST
நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு
- 15 March 2025 11:05 AM IST
மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 11:03 AM IST
2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.
- 15 March 2025 11:03 AM IST
பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- 15 March 2025 11:02 AM IST
சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளை பொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.
- 15 March 2025 11:01 AM IST
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.