என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 11:00 AM IST
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
- 15 March 2025 10:59 AM IST
கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:58 AM IST
ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:58 AM IST
500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.
- 15 March 2025 10:57 AM IST
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:57 AM IST
9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:55 AM IST
5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
- 15 March 2025 10:54 AM IST
இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- 15 March 2025 10:54 AM IST
தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு