என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 9:43 AM IST
கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:42 AM IST
55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:41 AM IST
தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:41 AM IST
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அவையில் பங்கேற்றுள்ளனர்.
- 15 March 2025 9:39 AM IST
உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:37 AM IST
வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:37 AM IST
5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:36 AM IST
விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்