என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 10:18 AM IST
கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.215-ல் இருந்து ரூ.349-ஆக உயர்த்தப்படும்.
- 15 March 2025 10:17 AM IST
கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- 15 March 2025 10:17 AM IST
பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:16 AM IST
தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:15 AM IST
35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:14 AM IST
இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்காக பயிர் காப்பீடு திட்டம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:13 AM IST
100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:12 AM IST
63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
- 15 March 2025 10:11 AM IST
இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்