என் மலர்
தமிழ்நாடு

X
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்.. நான் ஆட்சியில் இருந்தால்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
By
மாலை மலர்2 March 2025 8:39 AM IST

- தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது.
- பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
திருத்தணி:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரெயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது,
'தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களால் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபவடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். இந்த மிருகங்களை வெட்டிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.
Next Story
×
X