என் மலர்
தமிழ்நாடு

X
அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கே.பி.ராமலிங்கம் அடாவடி என புகார்
By
மாலை மலர்21 Feb 2025 3:23 PM IST

- மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
- கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து சால்வையை கே.பி.ராமலிங்கம் பறித்தபோது அவர் கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்டு உள்ளார். அதுதொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X