என் மலர்
தமிழ்நாடு
பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி- மாடுபிடி வீரர்கள் புகார்
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகளை பிடித்தாலும் பரிசுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் முதலாவது ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி என மாடுபிடி வீரர்கள் புகார் அளித்தனர். வர்ணனையாளரால் பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
வர்ணனையாளர் தனது இஷ்டத்திற்கு முடிவுகளை மாற்றி மாற்றி அறிவிக்கிறார். வர்ணனையாளர் தான் மாடு பிடிக்கப்பட்டதா? இல்லையா என்பதை அறிவிக்கிறார்.
உள்ளூர் மாடுகள் அவிழ்க்கப்படும்போது அவற்றை வர்ணனையாளர் பார்ப்பது இல்லை. ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகளை பிடித்தாலும் பரிசுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
முடிவை அறிவிக்கும் வர்ணனையாளரான விழா கமிட்டி செயலாளர் பிரபு மீது மாடுபிடி வீரர்கள் புகார் அளித்தனர்.