என் மலர்
தமிழ்நாடு

X
பையனூர் சிப்காட் கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
By
மாலை மலர்10 March 2025 12:18 PM IST

- பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
- பொதுமக்கள் ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை நேரில் சென்று திறந்து வைத்தார்.
பின்னர் இந்த தொழிற் சாலையை பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் வழி நெடுக பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தி.மு.க. கொடி வைக்கப்பட்டிருந்தது.
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் நின்று முதலமைசசர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
Next Story
×
X