என் மலர்
தமிழ்நாடு

X
கன்னியாகுமரியில் கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு
By
மாலை மலர்24 Feb 2025 2:47 PM IST

- மரணப் பாறை' அருகே செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.
- கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அவர்களில் விஜய் (வயது 27) என்ற இளைஞர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்பி எடுக்க முயன்ற விஜய் தவறி கடலில் விழுந்தார்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கிய இளைஞரை கண்டுபிடிக்க தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலாப் பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X