search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும்- பிரேமலதா
    X

    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும்- பிரேமலதா

    • விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.
    • யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த விழாவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வந்தனர். வரும் வழியில் விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் கட்சிக்கொடியை அவர்கள் ஏற்றினர். பின்னா் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஜயகாந்த் பிறந்து வளர்ந்த ஊரான ராமானுஜபுரத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உள்ளோம். அதே இடத்தில் விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.

    கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கவர்னரும், ஆளுகின்ற அரசும் இணைந்துதான் செயல்பட்டனர். தற்போது இவர்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனை. யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக சென்றால் நாட்டுக்கு நல்லது. இதில் இருவரும் எங்கள் பக்கம்தான் நியாயம் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான தீர்வை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும். வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×