search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு முடிவு 2026 தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான சான்று- சந்திரகுமார்
    X

    ஈரோடு கிழக்கு முடிவு 2026 தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான சான்று- சந்திரகுமார்

    • தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.
    • தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,443 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் வெற்றிக்கு காரணம் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான்.

    * தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வெகுஜன மக்களிடையே வெகுவாக சென்றடைந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் இந்த தேர்தலின் முடிவு.

    * இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. அவர்கள் அவர்களுடைய கட்சியினரிடம் ஓட்டு போட போக வேண்டாம். இல்லையென்றால் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு வந்து இருக்கலாம்.

    * தி.மு.க. எதிர்வரும் 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அச்சாரமாக இந்த தேர்தல் முடிவை கொடுத்துள்ளனர். 2026 தேர்தலிலும் தற்போதைய நிலை தொடரும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×