என் மலர்
தமிழ்நாடு
நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
- இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது.
- நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.
இதனைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவுக்காக நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.