search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்

    • ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
    • பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    ஏற்கனவே தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார்.

    ஆனால் சில பகுதிகளில் வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்த ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும்போது அனுமதி இல்லை என வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சியினர் மீதும், வேட்பாளர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நேற்று தி.மு.க. வேட்பாளருக்கும் அனுமதி கிடைக்காததால் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டது.

    தேர்தல் 5-ந்தேதி என்றாலும் பிரசாரம் செய்ய 3-ந் தேதி மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதி உள்ளது. அதன்படி இன்னும் 14 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பிரசாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெற வேண்டும். வேட்பாளர் பிரசாரம் செய்யும் பகுதியை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும். இங்கு 48 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். எனவே அனைவரும் பிரசாரம் செய்வார்கள். அதை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தங்கள் அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும்.

    தற்போது ஒரு கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மனுவில் கூட குறிப்பிட்ட இடம், நேரம் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளை பொதுவாக குறிப்பிட்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை காலை முதல் இரவு வரை என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் 3-ந் தேதி வரை தொகுதி முழுவதும் அந்த ஒரே கட்சியினர்தான் பிரசாரம் செய்ய முடியும். இதற்கு எப்படி அனுமதி அளிக்க முடியாது.

    வேட்பாளர்கள் முறையாக பிரசாரம் செய்யும் இடத்தையும், தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். இதுபோல் 48 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறும் வகையில் வேட்பாளர்கள் முறையாக விண்ணப்பித்தால் அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×