என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி
- ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இன்று ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது. 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே… pic.twitter.com/4JnjWznTIs
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 10, 2025