என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகல்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
- செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
இதைத்தொடர்ந்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி செந்தில் முருகன் விலகி உள்ளார்.