search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
    X

    வேட்புமனு தாக்கல் நடைபெறும் மாநகராட்சி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

    • நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
    • அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவித்தது.

    அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 மற்றும் 12-ந் தேதி விடுமுறை தினமாகும். அதைத்தொடர்ந்து 13-ந்தேதி நடந்த வேட்புமனு தாக்கலின்போது 6 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று (வியாழக்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    நாளை கடைசி நாள் என்பதால் தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    Next Story
    ×