என் மலர்
தமிழ்நாடு
X
ஈரோடு கிழக்கு தொகுதி- தேர்தல் அதிகாரி மாற்றம்
Byமாலை மலர்22 Jan 2025 7:52 AM IST
- 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
- தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 46 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X