என் மலர்
தமிழ்நாடு

X
காத்திருந்த அதிர்ச்சி: டிரிம்மர் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த ஜல்லி கற்கள்
By
மாலை மலர்12 March 2025 8:50 AM IST

- டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர் ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.1,000-க்கு டிரிம்மர் ஆர்டர் செய்தார். இதைதொடர்ந்து நேற்று பார்சல் வீட்டிற்கு வந்தது.
அதை அவர் வாங்கிய போது, அட்டை பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் சந்தேகம் அடைந்து பார்சலை டெலிவரி செய்தவர் முன்னிலையில் பிரித்து பார்த்தார். அப்போது உள்ளே டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காஜா, டெலிவரி செய்த இளைஞரிடம் கேட்டபோது, பதில் கூறாமல் சென்றதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
X