என் மலர்
தமிழ்நாடு

X
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் அவதி
By
மாலை மலர்19 Feb 2025 7:33 AM IST

- மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
- கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர்.
செங்கல்பட்டு:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 22-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர்.
Next Story
×
X