என் மலர்
தமிழ்நாடு

ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை - சீமான்

- இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
- எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள் என்று சீமான் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை. நான் ஒருநாள் இஸ்லாமியன் இல்லை. நான் என் மக்களின் உணர்வுக்கானவன், உரிமைக்கானவன், உயிரானவன்.
நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு தொப்பி அணிந்து நோன்பு கஞ்சியை குடித்தவர்கள் இருக்கிறார்கள். நான் காட்டவா? தம்பி அதை விரும்புகிறார், செய்கிறார். அதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.