என் மலர்
தமிழ்நாடு

X
மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்
By
மாலை மலர்7 March 2025 11:22 AM IST

- பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.
திருவள்ளூர் :
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கியது. புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.
Next Story
×
X