search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    Budget 2025 Live Updates: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்

    • 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
    • 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.

    பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

    தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

    Live Updates

    • 1 Feb 2025 11:25 AM IST

      தாமரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் மகானாவுக்கு புிரய வாரியம் அமைக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்.

    • 1 Feb 2025 11:23 AM IST

      புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    • 1 Feb 2025 11:22 AM IST

      தானியங்கள் மீதான நமது தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    • 1 Feb 2025 11:21 AM IST

      பட்ஜெட்டில் தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 1 Feb 2025 11:18 AM IST

      நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    • 1 Feb 2025 11:17 AM IST

      பட்ஜெட்டில், விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்.

    • 1 Feb 2025 11:15 AM IST

      நிர்மலா சீதாராமன் தனது உரையில், " வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும், அரசு மே்கொண்ட கூட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1 Feb 2025 11:12 AM IST

      பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டின் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல்.

    • 1 Feb 2025 11:10 AM IST

      பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

    • 1 Feb 2025 10:54 AM IST

      மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பட்ஜெட்டில் ஒரு நோக்கம், உள்ளடக்கம் உள்ளது - அது இரண்டும் பட்ஜெட்டின் அளவை தீர்மானிக்கிறது. பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி தளர்வு கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்ப்போம். மேலும், 'வரி பயங்கரவாதத்திலிருந்து' முதலீட்டாளர்கள் சிறிது தளர்வு பெறுகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். ஜிஎஸ்டியில் சில சீர்திருத்தங்களை நாங்கள் கோரியுள்ளோம். மோடி 3.0 உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது, ஜிஎஸ்டி 2.0 எப்போது வரும் என்று பார்ப்போம்."

    Next Story
    ×