search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகர் அருகே லாரி மீது வாகனங்கள் மோதி விபத்து- 3 பேர் பலி
    X

    விருதுநகர் அருகே லாரி மீது வாகனங்கள் மோதி விபத்து- 3 பேர் பலி

    • லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது.
    • மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    விருதுநகர்:

    மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே அதிகாலையில் வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

    விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த வாகன விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×