என் மலர்
தமிழ்நாடு
பரந்தூர் விவகாரத்தில் நாடகமாடுகிறது தி.மு.க. - விஜய் விமர்சனம்
- நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர்.
- விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:
* நான் ஊருக்கும் வருவதற்கும், நமது த.வெ.க.வினர் நோட்டீஸ் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
* உங்களின் வசதிக்காக மக்களோடு இருப்பதை போன்று நம்பும் வகையில் நீங்கள் நடத்தும் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
* நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர்.
* மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
* விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
* விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
* நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.
* ஏர்போர்ட் கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இங்க வேணாம்னுதான் சொல்கிறேன்.
* அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என முடிவெடுத்த தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை.
* பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக அவர் கூறினார்.