என் மலர்
தமிழ்நாடு

X
சீனாவில் வேலை.. பொங்கலுக்கு ஊருக்கு வந்த இளைஞர் 'ஜல்லிக்கட்டு' மாடு முட்டி உயிரிழப்பு
By
மாலை மலர்16 March 2025 3:43 PM IST

- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Next Story
×
X