என் மலர்
உலகம்
ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம்: அமெரிக்க அதிபர்
- ஈரான் மீதான தாக்குதலை உடனே தொடங்கும்படி முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
- ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பேசினார்.
வாஷிங்டன்:
லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.