search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிரியாவில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி
    X

    சிரியாவில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி

    • பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
    • அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் மோதலில் ஈடுபடுகின்றன.

    வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது.

    இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

    கடந்த டிசம்பரில் அதிபர் ஆசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் கவிழ்க்கப்பட்டது முதலே இப்பகுதிகளில் வன்முறை நிலவி வருகிறது.

    சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் துருக்கிய ஆதரவு பிரிவுகள், அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

    கடந்த புதனன்று நாட்டின் இடைக்கால அதிபாராக அல்- நுஸ்ரத் என்ற முக்கிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா நியமிக்கப்பட்டார்.

    நேற்றைய தினம் சவுதி அரேபிய இளவரசரை அந்நாட்டுக்கு சென்று அஹ்மத் அல்-ஷாரா சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    Next Story
    ×