search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து
    X

    சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு 'நாசா' வாழ்த்து

    • சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
    • இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வாஷிங்டன்:

    சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×