search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என்ற டிரம்பின் பரிந்துரையில் இணைய விரும்பாத சீனா
    X

    ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என்ற டிரம்பின் பரிந்துரையில் இணைய விரும்பாத சீனா

    • ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என சீன அதிபர் மற்றும் ரஷியா அதிபர் புதினிடம் கூற விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • இது நல்ல யோசனை. அமெரிக்கா செய்தால், நாங்கள் செய்வோம் என புதின் கருத்து தெரிவித்திருந்தார்.

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் செலவினங்களை குறைக்க முடிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும சமஅளவில் நிதியளிக்க வேண்டும். அமெரிக்காக அதிக அளவில் நிதி வழங்காது என மிரட்டல் விடுத்துள்ளார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசும்போது, நம்முடைய ராணுவ பட்ஜெட்டை பாதியாக குறைக்கலாம் என அவர்களிடம் சொல்ல விரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக நேற்று ரஷிய அதிபர் புதின் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில் "இந்த சிறந்த யோசனை என நினைக்கிறேன். அமெரிக்கா முதலில் 50 சதவீதம் குறைக்க வேண்டும். பின்னர் நாங்கள் 50 சதவீதம் குறைப்போன். அதன்பின் சீனா விரும்பினால், கட்டாயம் இணையும்" எனத்தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் டிரம்பின் பரிந்துரையில் இணைய விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில் "சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதிப்பூண்டுள்ளது. ஆனால், அதன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு செலவினம் இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களை பாதுகாப்பதாகும்.

    சீனா ஒரு தற்காப்பு உத்தியை கொண்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. மேலும் எந்த நாட்டுடனும் ஒருபோதும் ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×