என் மலர்
உலகம்
X
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
Byமாலை மலர்14 March 2024 9:52 PM IST
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.
Next Story
×
X