என் மலர்
உலகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
- கடந்த 10-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
- வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.