என் மலர்
உலகம்
X
காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்தால் தரையிறக்கம்
Byமாலை மலர்25 April 2023 12:38 AM IST (Updated: 25 April 2023 8:56 AM IST)
- பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மாண்டு அல்லது டெல்லியில் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் பகுதியில் தீ பிடித்ததை அடுத்து விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மாண்டு அல்லது டெல்லியில் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
இந்நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் விமானம் துபாய்க்கு புறப்பட்டுவிட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
Next Story
×
X