என் மலர்
பிரான்ஸ்
- வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
- ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதி சுற்றில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.
இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனை நாம் சு ஹியோனிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே நடந்த வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
- வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார்.
இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
- துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.
இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
- இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- அதில் ஷூட் ஆப் முறையில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்.
இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
- விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.
அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.
- சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
- 'நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன்'
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டு வீரர் டைலர் மிஸ்லாஸுக் Tyler Mislawchuk நேற்று நடந்த ட்ரைலதான் போட்டியின் பின் 10 முறை வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ட்ரைலதான் என்பது நீச்சல், ஓட்டம், மற்றும் சைக்கிளிங் ஆகிய 3 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டியாகும். அந்த வகையில் நேற்று நடந்த டிராலதான் போட்டியில் சியன் நதியில் நீந்தி வெளியில் வந்த டைலருக்கு குமட்டல் ஏற்பட்ட நிலையில் 10 முறை தொடர்ச்சியாக அரங்கிலேயே அவர் வாந்தி எடுத்தார்.
முன்னதாக சியன் நதி மாசுபாடு காரணமாக ட்ரைலதான் போட்டிகள் தாமதமாக நடந்தது கவனிக்கத்தக்கது. மேலும் போட்டி தொடங்கும்போது, காற்றின் வெப்பநிலையானது 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்தது. எனவே மாசுபாடு மற்றும் வெப்பநிலை காரணமாக டைலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய கனேடிய வீரர் டைலர், நான் வின்னிபெக் நகரைச் சேர்ந்த சிறுவன், அதிலும் குறிப்பாக ஓக் பிளப்ஸ் பகுதியில் இருந்து வருபவன், அங்கு குளிர்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 50 டிகிரி வரை குறையும். ஆனால் நான் இப்போது சம்மர் ஒலிம்பிக்சில் விளையாட வந்துள்ளேன் என்று தனக்கு 27 டிகிரி செல்ஸியசே அதிகம் என்ற அர்த்தத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் 1:44:25 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து டைலர் 9 வது இடம் பிடித்துள்ளார்.பிரிட்டன் வீரர் அலெக்ஸ் யீ [ Alex Yee] 1:43:33 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றுள்ளார்.
- சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
- இவர்கள் எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.
போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.
இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
அதில், "ஒவ்வொரு வீரருக்கும் பாரபட்சமின்றி விளையாட்டைப் பயிற்சி செய்ய உரிமை உண்டு. கெலிஃப் மற்றும் யூ-டிங் இருவரும் தங்களை பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்கி தான் குத்துச்சண்டை போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அவர்கள் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்த 2 வீராங்கனைகள் பற்றிய தவறான தகவல்களை நாங்கள் பார்த்து வருகிறோம். பெண்கள் பிரிவில் இந்த 2 வீராங்கனைகளும் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். .
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த 2 குத்துச்சண்டை வீராங்கனைகளும் தற்போது எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
- ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] கலந்துகொண்டார்
- தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
தோல்வியின் தாக்கமும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இந்நிலையில் ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் கலந்துகொண்ட 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] 200 மீட்டர் பெண்கள் ஒற்றயர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிக்கு தகுதி பெறும் சுற்றில் கனேடிய வீராங்கனையுடன் விளையாடினார்.
2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் 200 மீட்டரைக் கடந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய தமரா, திடீரென மயங்கி விழுந்தது அங்குள்ளவர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது. துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழு, தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றது.
தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தமரா, சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக ஒலிம்பிக் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னோடு போட்டியிட்ட கனேடிய வீராங்கனை சம்மர் மெக்லண்டோஷ் -ஐ Summer McIntosh விட 4.3 நொடிகள் தாமதமாக தமரா இலக்கை அடைந்ததால் காலிறுதிக்கு அவர் தகுதி பெறவில்லை.
- துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர்.
- மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீன தைபே வீரர் சோ டைனுடன் மோதினார்.
போட்டியின் துவக்கத்தில் நன்றாக விளையாடி சீன வீரர் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன் பிறகு சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் 21-15 மற்றும் 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில், மேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்ஷ்யா சென் பெற்றுள்ளார்.
- கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது.
- துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மனு பாக்கர்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று மதியம் நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது. மாலையில் நடந்த வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இதற்கிடையே, இரவில் நடந்த அரையிறுதியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா-அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம்-வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் தென் கொரிய ஜோடி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி அடைந்த அங்கிதா-தீரஜ் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்க ஜோடியுடன் விளையாடியது.
இதில் அமெரிக்க ஜோடியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய ஜோடி.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை வென்றார்.
- இதன்மூலம் இகா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்லோவாகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
- கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.