search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறினார்.
    • மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார்.

    முதல் செட்டில் 1-1 என சமனிலை வகித்தது. 2வது செட்டில் 3-1 என இந்தோனேசிய வீராங்கனை முன்னிலை வகித்தார். 3வது செட்டில் 3-3 என சமனிலை வகித்தனர். 4வது செட்டில் பஜன் கவுர் 5-3 என முன்னிலை பெற்றார். 5வது செட்டில் 7-3 என கைப்பற்றி வென்றார்.

    இதன்மூலம் ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்/

    • 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.
    • இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடியில் எட்டினார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் போட்டியில் 4-வது பிரிவில் இவருடன் மேலும் 6 பேர் கலந்து கொண்டனர். 2000 மீட்டர் தொலைவை துடுப்பு போட்டு கடக்க வேண்டும். பால்ராஜ் பன்வார் முதல் 500 மீட்டரை ஒரு நிமிடம் 42.28 வினாடியில் கடந்தார். 1000 மீட்டரை 3 நிமிடம் 29.34 வினாடியில் கடந்தார்.

    1500 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் 17.22 வினாடிகளில் கடந்தார். 2000 மீட்டர் அதாவது இலக்கை 7 நிமிடம் 5.10 வினாடிகளில் எட்டினார். இதன்மூலம் காலிறுதி 4-ல் 5-வது இடம் பிடித்து அரையிறுதி (C/D) சுற்றுக்கு முன்னேறினார். நாளை அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

    • டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
    • கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

    இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32  சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 

    • பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
    • தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille]  உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது. 

    • சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.45 மணிக்கு நடைபெற்றது. அதில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு சரப்ஜோத் சிங்- மனுபாகெர் ஜோடி முன்னேறியுள்ளது.

    அதே சமயம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, இந்திய ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்ஃபஸ் ஆகியோருக்கு எதிரான ஆட்டம் ஜெர்மனி வீரர் மார்க்கின் முழங்கால் காயம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.

    அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.

    4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான  போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒலிம்பிக் போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர்.
    • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.

    இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

    இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆடவர் ஹாக்கி லீக் சுற்று போட்டியில் அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொள்கிறது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் அர்ஜூன் பாபுதா பங்கேற்கிறார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    பேட்மிண்டன்:

    ஆண்கள் இரட்டையர் லீக் சுற்று : சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி (இந்தியா) - மார்க் லாம்ஸ்பஸ்- மார்வின் சிடெல் (ஜெர்மனி), பகல் 12 மணி.

    பெண்கள் இரட்டையர் லீக் சுற்று : தனிஷா கிரஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா (இந்தியா) - நமி மேட்சுயமா- சிஹாரு ஷிட்டா (ஜப்பான்), பகல் 12.50 மணி.

    ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று : லக்ஷயா சென் (இந்தியா)- ஜூலியன் கராக்கி (பெல்ஜியம்), மாலை 5.30 மணி.

    துப்பாக்கி சுடுதல்:

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று : சரப்ஜோத் சிங்- மனு பாக்கர், அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான், பகல் 12.45 மணி.

    ஆண்களுக்கான டிராப் பிரிவு தகுதி சுற்று : பிரித்விராஜ் தொண்டைமான், பகல் 1 மணி.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: ரமிதா ஜிண்டால், பகல் 1 மணி.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: அர்ஜூன் பாபுதா, மாலை 3.30 மணி.

    ஹாக்கி:

    ஆடவர் லீக் சுற்று: இந்தியா- அர்ஜென்டினா, மாலை 4.15 .

    வில்வித்தை:

    ஆடவர் அணிகள் பிரிவு காலிறுதி : தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ரமேஷ் ஜாதவ், மாலை 6.30 மணி.

    டேபிள் டென்னிஸ்:

    பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று: ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), இரவு 11.30 மணி.

    • பி.வி.சிந்து ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
    • டென்னிசில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

    பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார்.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

    துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதினார். இதில் பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பாபுதா பங்கேற்றார்.

    இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×