என் மலர்
பிரான்ஸ்
- ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இன்று மனு பாகெர் பங்கேற்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:
துப்பாக்கி சுடுதல்:
பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : இளவேனில், ரமிதா ஜிண்டால், பகல் 12 45 மணி.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று : அர்ஜூன் பாபுதா, சந்தீப் சிங், பிற்பகல் 2 45 மணி.
பெண்களுக்கான10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி: மனு பாகெர், மாலை 3 30 மணி.
பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று : பி.வி.சிந்து (இந்தியா) -பாத்திமா நபாஹா (மாலத்தீவு), பகல் 12.50 மணி.
ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று : எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) - பாபியன் ரோத் (ஜெர்மனி), இரவு 8 மணி.
துடுப்பு படகு:
ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரிபிசாஜ் சுற்று : பால்ராஜ் பன்வார், பகல் 1.06 மணி,
டேபிள் டென்னிஸ்:
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : ஸ்ரீஜா அகுலா (இந்தியா) - கிறிஸ்டினா கால்பெர்க் (சுவீடன்), பிற்பகல் 2 15 மணி.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சரத் கமல் (இந்தியா) - டெனி கொஜூல் (சுலோவேனியா), மாலை 3 மணி.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று : மணிகா பத்ரா (இந்தியா) - அன்னா ஹூரேசி (இங்கிலாந்து), மாலை 4 30 மணி.
நீச்சல்:
ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : ஸ்ரீஹரி நடராஜ் பிற்பகல் 2 30 மணி.
பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று : தினிதி தேசிங்கு, பிற்பகல் 2 30 மணி.
டென்னிஸ்:
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று : சுமித் நாகல்-கோரென்டின் மவுடெட் (பிரான்ஸ்), மாலை 3 30 மணி.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று 1 - ரோஹன் போபண்ணா-என் ஸ்ரீராம் பாலாஜி vs கேல் மான்ஃபில்ஸ்/எட்வர்ட் ரோஜர்-வாசெலின் (பிரான்ஸ்) - பிற்பகல் 3 30 மணி.
குத்துச்சண்டை:
பெண்கள் 50 கிலோ எடைபிரிவு தொடக்க சுற்று :நிகாத் ஜரீன் (இந்தியா)-மேக்சி கரினா கோட்ஜெர் (ஜெர்மனி), மாலை 3.50 மணி.
வில்வித்தை:
பெண்கள் அணிகள் பிரிவு கால்இறுதி : அங்கிதா பகத், தீபிகா குமாரி, பஜன் கவுர் , மாலை 5 45 மணி.
- பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
- ஹாக்கி ஆடவர் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது.
ஹாக்கி ஆடவர் பி பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா,அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா அணியும் இடம் பெற்றுள்ளது
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் 3 -2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
- பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
- பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென்னும், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், ஜோர்டான் வீரர் அபோயமானுடன் மோதினார்.
இதில் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
- இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானை
21-8, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிக்கு முன்னேறினார்.
- முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-8 என எளிதில் வென்றார். 2வது செட்டில் கெவின் கடும் போராட்டம் அளித்தார். இதனால் முதலில் பின்தங்கிய லக்ஷயா சென், அடுத்து அதிரடியாக ஆடி 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
- ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.
ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.
ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.
- பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
- இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, பிரான்சில் தொடங்கிய ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் நடந்து வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகத்திடம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை ஒப்புக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்தது.
இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.
அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.
- தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தியது.
- வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தியது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று தொடக்க விழாவுடன் தொடங்கியது. இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான போட்டி நடைபெற்றது. தகுதி சுற்றில் சீனா, தென்கொரியா, கஜகஸ்தான், ஜெர்மனி அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.
முதல் இரண்டு இடங்களை பிடித்த சீனா- தென்கொரியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்திற்காக மோதின. கஜகஸ்தான்- ஜெர்மனி அணிகள் வெண்கல பதக்கத்திற்காக மோதின.
வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் கஜகஸ்தான் 17-5 என ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.
சீனா- தென்கொரியா இடையிலான தங்க பதக்கத்திற்கான போட்டியில் சீனா 16-12 என தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
இதன்மூலம பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா. தென்கொரியா வெள்ளி பதக்கம் வென்றது.
- இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
- அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.
ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. நேற்று இரவு வீரர்களின் அணிவகுப்பு , கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் தாமஸ் மகின்டோஸ் [Thomas Mackintosh] 3 வது இடமும், கிரீஸ் நாடு வீரர் ஸ்டெபானோஸ் டோஸ்க்கோ [Stefanos Ntousko] 2 வது இடமும், எகிப்து வீரர் அப்தேல்காலெக் எல்பனா[Abdelkhalek Elbanna] முதல் இடமும் பிடித்துள்ளனர்.
4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக நாளை நடக்கும் ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.
- ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர்.
- இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர்.
ரமிதா - பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தைப் பிடித்தனர்.
இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளைப் பெற்று 12வது இடம் பிடித்தனர்.
தகுதி சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீரரும் 30 முறை சுட வாய்ப்பளிக்கப்படும். தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கம் வெல்லும் சுற்றுக்கு முன்னேறும்.
சீனா (632.2), கொரியா (631.4), கஜகஸ்தான் (630.8), ஜெர்மனி (629.7) ஆகிய 4 நாடுகள் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேறின.
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் தங்கப் பதக்கத்துக்காகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காகவும் போட்டிப் போடும்.
- இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
- பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.
இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.
நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப் பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.
- இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா.
- இன்னும் 45 விளையாட்டுகளில் சிலவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த
இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.
7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.
முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.