என் மலர்
பிரான்ஸ்
- பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
- ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இதற்கிடையே, ரஷியாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.
ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் கூறுகையில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இளம்பெண் ஒருவர் சேலை அணிந்து கொண்டு வளையங்களை உடலில் சுற்றி வளைத்து 'முக்காலா... முக்காபுலா...' பாடலுக்கு 'ஹூலா ஹூப்' வகை நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'ஹூலா ஹூப்' என்பது இடுப்பை சுற்றி சுழலும் ஒரு பொம்மை வளையம் ஆகும். வீடியோவில் நடனம் ஆடும் பெண் இந்திய கலைஞரான எஷ்னா குட்டி என்பவர் ஆவார். இவர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனவர்.
தற்போது அவரின் இந்த வித்தை வீடியோ இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் எஷ்னாவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
- இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும்
உலகின் புவிசார் அரசியல் போர்களுக்கிடையிலும் பதற்றங்களுக்கு இடையிலும் குழம்பிக் கிடைக்கும் நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர தேர்தலை அறிவித்தார்.
முன்னதாக நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்த நிலையில் இந்த முடிவை மேக்ரான் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேக்ரான் அறிவித்தபடி வரும் ஜூன் 30 தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரான்சில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமானுவேல் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி தேர்தல் என்பதையும் தாண்டி உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்ப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததை அடுத்து மேக்ரான் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .
- 20 ஆண்டாக முழு சம்பளத்தையும் வழங்கிய நிறுவனம் எந்த வேலையையும் வழங்கவில்லை.
- வேலை வழங்காத முன்னாள் நிறுவனத்தின்மீது அந்தப் பெண்மணி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரான்ஸ்:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்ற பெண்மணி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 1993-ம் ஆண்டில் பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (ஆரஞ்சு நிறுவனத்தால் கையகப்படுத்துவதற்கு முன்) பணியில் சேர்ந்தார்.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பணிகளை நிறுவனம் வழங்கியது. அவர் 2002-ம் ஆண்டு வரை வேலை செய்தார்.
மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என 2002-ல் வான் வாசென்ஹோவ் கோரிக்கை விடுத்தார். ஆனால் புதிய சூழல் அவருக்கு ஏற்றதாக இல்லை. அவருக்கு ஏற்ற் வேலை சூழலை மாற்றி அமைக்க ஆரஞ்ச் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முழு சம்பளத்தையும் அவருக்கு தொடர்ந்து வழங்கிய ஆரஞ்ச் நிறுவனம், எந்த வேலையையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சஸ்பெண்ட் செய்யாமல் அவரை கம்பெனியில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை இது. 20 ஆண்டாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருப்பது தாங்கமுடியாத கஷ்டம். தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
2015-ம் ஆண்டில் அரசு மற்றும் பாகுபாடு தடுப்புக்கான உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வான் வாசென்ஹோவ் முன்னாள் நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ஆரஞ்சு நிறுவனத்தின் மீது பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
- தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார்.
- ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட். இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அப்போது இவர் ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். ஆனாலும் தான் பார்த்த வேலையில் அவருக்கு போதிய திருப்தி கிடைக்கவில்லை.
இதனால் அவர் தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார். அங்குள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார். அதில் அவருக்கு ரூ.25 லட்சம் வரை மட்டுமே சம்பளமும், வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வலேரி கூறுகையில், முன்பை விட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.
- சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது.
- பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கி உள்ளனர்.
பிரான்சை சேர்ந்த நிக்கோலஸ் பாரியோஸ் மற்றும் டேவிட் பெய்ரூ என்ற 2 வாலிபர்கள் உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
'ஸ்டார்பைக்' என்ற புனைப்பெயர் கொண்ட அவர்களது சைக்கிள் 7.77 மீட்டர் (25 அடி, 5 அங்குலம்) உயரம் கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், பாரியோஸ், டேவிட் ஆகிய இருவரும் ஒரு சாலையில் தங்களது சைக்கிளை நவீன எந்திரங்கள் உதவியுடன் உயரமான சைக்கிளாக மாற்றும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது. இந்த சைக்கிள் அலாய் மற்றும் எக்கு மூலம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் இதனை உருவாக்கி உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் மது அருந்தியபோது பாரியோஸ், டேவிட் ஆகியோர் இந்த சைக்கிள் உருவாக்கம் தொடர்பாக யோசனை தோன்றியதாகவும், அதன்படி சுமார் 3 மாதங்களாக இதற்கான பொருட்களை வாங்கி வடிவமைத்ததாகவும் கூறுகிறார்கள்.
- ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
- 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.
பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.
அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதில் கைப்பற்றிசாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
- தற்போது நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் ரூ.38 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை தேவை என கோரியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரான பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்த சதி செய்கிறார். முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். பங்குச்சந்தை தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.
இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் பங்குச்சந்தை உலகின் முதல் 5 பொருளாதாரங்களின் சந்தை மூலதனத்தில் நுழைந்துள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது அப்போது இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது. இன்று சந்தை மதிப்பு ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்புடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோற்றது.
பாரீஸ்:
கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-இத்தாலியின் சைமன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
- காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.
பாரீஸ்:
உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.
முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.